மும்பைக்கு பறந்த நடிகர் ரஜினிகாந்த்.! எதற்காக போகிறார் தெரியுமா.?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினி இந்த திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமாக நடித்துள்ளதாள் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் ஆவலாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினி தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதால் நடிகர் ரஜினி இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்து வருகிறார்.இந்த திரைப்படம் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் நடிகர் ரஜினியின் காட்சி மட்டும் இன்னும் நிறைவடையாமல் இருக்கிறதாம். 34 நாட்கள் நடைபெற்ற லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இந்நிலையில் நடிகர் ரஜினி லால் சலாம் திரைப்படத்திற்காக மும்பை சென்றுள்ளார் ஆம் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றுள்ள பொழுது எடுத்த புகைப்படங்களும்,வீடியோக்களும் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி  வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

rajini
rajini

அதேபோல் லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக லால் சலாம் திரைப்படத்தில் இவர் நடிப்பது உறுதி ஆகிவிட்டது எனவும் ஒரு சில ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment