ரஜினியை சீண்டிப் பார்த்த அமேசன் ப்ரைம்.! எச்சரித்த ரஜினி.! நடந்து என்ன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் என்பது நாம் அறிந்ததே. சமிபத்தில் அவர் நடித்த பேட்ட, தர்பார் போன்ற படங்கள் நல்ல ஒரு வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணத்தா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் எதிர்பார்ப்பு மக்கள் மன்றம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர் மன்றம் மக்கள் அப்செட்டில் உள்ளனர். இந்த நிலையில் ரஜினி படம் குறித்து தற்போது ஒரு பரபரப்பு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது சமீபகாலமாக தமிழ் திரைப்படங்கள் பலவற்றை ஆன்லைனில் பார்க்க உதவுகிறது அமேசன் பிரைம் விடியோ இதிலிருந்து படையப்பா திரைப்படம் திடீரென நீக்கப்பட்டு உள்ளது என்று பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.அமேசன் பிரைம் சமீபகாலமாக புதிய திரைப்படங்கள் வெளியிட்டு வருகிறது.

இருப்பினும் ரஜினிகாந்த் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த படையப்பா திரைப்படம் ரஜினிகாந்துக்கு சொந்தமாக தயாரித்து நடித்த படம் படையப்பா திரைப்படம் அமேசன் பிரைம் இல் வெளியாகி இருந்தது இப்படத்தை அமேசானில் வெளியிடுவது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் முறையான அனுமதி கோரவில்லை என கூறப்படுகிறது இது குறித்து ரஜினி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமேசான் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மேலும் படங்களை ஆன்லைன் கரங்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் உரிமைகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது இதனை ரஜினி ரசிகர்கள் கவனித்து சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆக்கினர். இது ரஜினியின் கவனத்திற்கு சென்ற அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க காரணமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது இதனால் இப்படம் அமேசன் பிரைம் வீடியோவில் இருந்து நீக்கப்பட்டது.

Leave a Comment

Exit mobile version