ரஜினியை திட்டியதால் தண்டவாளத்தில் படுத்து கொண்டு நடிகையை மிரட்டிய ரசிகர்.! என்ன ஒரு தில்லு

0

பொதுவாக சினிமாவில் நடித்து வரும் நடிகர்களுக்கு சம்பளம் ஒருபுறம் அதிகமாக வேண்டும் என்றாலும் ஒரு புறம்  ரசிகர்கள் மத்தியிலும் அதோடு தனது புகழ் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று நினைப்பது வழக்கமான ஒன்று இது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது அன்பை  வெளிப்படுத்துவது வழக்கம் அதே ஒரு கட்டத்தில் அன்பு அதிகமாவதால் ஒருகட்டத்தில் ரசிகர்களால் அந்த நடிகர்களுக்கு சில பிரச்சனைகளும் வருவது வழக்கம்.

அந்த வகையில்தான் முன்னணி நடிகரான ரஜினியை ஒரு நடிகை படத்தின் காட்சிகளுக்காக திட்ட இதனால் கோபமடைந்த ரசிகர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நடிகர் எம்.ஜி.ஆருக்கு அடுத்ததாக அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் ரஜினிகாந்த் தான்.

இவர் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக சினிமாவுலகில் கலக்கி வருகிறார். தற்போது இவருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாக சமீப காலங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களை பார்த்த ரசிகர்கள் முன்பு இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை என்று கூறி வருகிறார்கள். எனவே விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரஜினி நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அருணாச்சலம் இத்திரைப்படத்தில் ரஜினியை நடிகை வடிவுக்கரசி திட்டுவார்.

இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கோபமடைய அதில் ரசிகர் ஒருவர் வடிவுகரசி ட்ரெய்னில் போவதை அறிந்து தண்டவாளத்தில் படுத்து கொண்டு  வடிவுகரசி ரஜினியிடம் மன்னிப்பு கேட்டால் தான் இங்கிருந்து போவேன் என்று கூறியுள்ளார். உடனே வடிவுக்கரசி ட்ரெயினில் இருந்து கீழே இறங்கி அந்த ரசிகருடன் பேசி சமாதானப் படுத்தி உள்ளார்.