இந்த சூப்பர் ஹிட் திரைப்படத்திற்காக எல்லாத்துக்கும் டபுள் சம்பளம் கொடுத்த ரஜினி!! நெகிழ்ந்த படக்குழு..

0

பொதுவாக சினிமா என்றால் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வந்தார்கள் என்றால் மிகவும் ஆடம்பரமாக இருப்பது வழக்கம் ஆனால் தனது எளிமையினால் திரைவுலகில் வளர்ந்தவர்தான் நடிகர் சூப்பர் ஸ்டார். பொதுவாக அனைவரும் சூப்பர் ஸ்டார் தற்பொழுது சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கீறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரின் எளிமை தான் என்று கூறி வருகிறார்கள்.

இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் பல வருடங்கள் ஆனாலும் கூட தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ள திரைப்படங்கள் பலவகை உள்ளது. அந்த வகையில் ஒரு திரைப்படம் தான் படையப்பா இத்திரைப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடந்த சில உண்மைகளை திரைப்படத்தின் தயாரிப்பாளர் சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இத்திரைப்படம் ஓரளவிற்கு அதிக பட்ஜெட்டில் உருவாகலாம் என்ற முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் போட்ட பட்ஜெட்டை விடவும் குறைவாக தான் செலவானதாகவும் படையப்பா படத்திற்காக போட்ட பட்ஜெடில் மீதியிருந்த தொகையை இத்திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் பிரித்து கொடுக்குமாறும் சொன்னாராம் சூப்பர் ஸ்டார்.

pataiyappa
pataiyappa

இந்த தகவல் தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதாக இருந்தார் ஆனால் சில காரணத்தினால் அரசியல் வேண்டாம் என்று தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்து வருகிறார்கள்.