சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிவுடன் இணையும் பிரபல நடிகர்.! ஜெய்லர் படத்தில் அதிரடி காட்டும் நெல்சன்..

jailer
jailer

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இந்த படத்தில் தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல் பல மொழிகளைச் சேர்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்து வருவதாக தொடர்ந்து அப்டேட் வெளிவரும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாலிவுட் பிரபலம் ஒருவரை ஜெயிலர் திரைப்படத்தில் களம் இறக்கி உள்ளார்கள் அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படத்தில் நாள்தோறும் ஏதாவது ஒரு பிரபலம் இணைந்து வரும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்றது ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தையே கொடுத்தது. எனவே ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படமாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற காமெடி கலாட்டா திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நெல்சன் திலிப் குமார் இவர் முதன் முறையாக ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தினை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் பூஜை உடன் துவங்கிய நிலையில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர்கள் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் இதனை அடுத்து தமன்னாவும் நடிக்க இருந்த நிலையில் சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியான நிலையில் தற்போது பாலிவுட் பிரபல நடிகர் ஒருவர் மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்துள்ளது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதில் ஜாக்கி ஷெரஃப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக பட குழுவினர்களின் மூலம் அதிகாரம் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினி மற்றும் ஜாக்கி இருவரும் இணைந்து கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ஹிந்தியில் உத்தர் தக்ஷின் படத்தில் நடித்திருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள்.