ஹாலிவுட் நடிகர் என்னப்பா ஹாலிவுட் நடிகர்.. நம்ம தலைவரை பார்த்தீர்களா.! கெத்து காட்டும் ராதாரவி வைரலாகும் புகைப்படம்..!

0
radha-ravi
radha-ravi

ஒவ்வொரு நடிகரும் ஹாலிவுட் நடிகரை போல் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் இது சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது ராதா ரவி போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகன் தான் ராதாரவி தன்னுடைய பள்ளி பருவத்திலேயே ஜூனியர் சீசர் போன்ற நாடகங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அதன்மூலம் நடிப்பு திறமையை அதிகமாக வளர்த்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டார் அதன் வெளிப்பாடு தான் கல்லூரி காலங்களிலும் நண்பர்களுடன் இணைந்து பல நாடகங்களில் நடித்தார்.

பின்பு விகே ராமசாமி எம் ஆர் ஆர் வாசு டி கே சந்திரன் ஆகியோர்களின் நாடகங்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். அதன் பின்னணி தான் டி ராஜேந்திரன் திரைப்படமான உயிர் உள்ளவரை உஷா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைய ஆரம்பித்தார் பின்பு வைதேகி காத்திருந்தால், உயர்ந்த உள்ளம் சின்னத்தம்பி, பூவேலி, உழைப்பாளி, குரு சிஷ்யன் என பல திரைப்படங்களில் நடித்தார்.

இவர் முதன்முதலாக கதாநாயகனாக வீரன் வேலுத்தம்பி என்ற திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலை நாட்டவில்லை எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் மீண்டும் குண சத்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடிக்க துவங்கினார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் ராதாரவி.

இந்த நிலையில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் ஹாலிவுட் நடிகர்களை போல் போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் நடிகர் ராதாரவி இந்த வயதிலும் ஹாலிவுட் நடிகர்களை போல் போட்டோஷூட் நடித்தி அதன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகர் என்னப்பா ஹாலிவுட் நடிகர் நம்பர் தலைவரை பாருங்க ஹாலிவுட் நடிகரையே தூக்கி சாப்பிட்டுருவார் என கமெண்ட் செய்து வருகிறார்கள் இணையதளத்தில்.