திரையுலகில் சாதனை படைத்த பிரபலங்கள் பலரும் ஏதோ ஒரு உடல் நலக்குறைவு காரணமாக இம்மண்ணுலகை பிரிந்து விடுகின்றனர். இதனால் மகள் மற்றும் ரசிகர்களை பெருமளவு வருத்தமடைய செய்கிறது அதிலும் குறைந்த வயதிலேயே பிரபலங்கள் உலகை விட்டு பிரிவது பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கிறது.
அந்த வகையில் கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் புனித் ராஜ்குமார் உடல் நிலை சரியில்லாத போதும் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் திடீரென அவருக்கு மாரடைப்பு வந்தது உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பல சிகிச்சைகள் கொடுத்தும் காப்பற்ற முடியவில்லை.
அவர் உயிரிழந்ததை அடுத்து பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சினிமா உலகில் நடிப்பையும் தாண்டி கேட்பவர்களுக்கு உதவி, தன்னால் முடிந்த எல்லா விதத்திலும் பங்கு கொடுத்துள்ளார். மேலும் 1800 குழந்தைகளின் கல்வியை கூட ஏற்று இருந்தார்.
தற்போது அவர் இல்லாதால் அந்த 1800 குழந்தைகளின் கல்வி செலவையும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சிதிரமாக இருக்கும் விஷால் இனி ஏற்று கொள்வதாக எனிமி படத்தின் நிகழ்ச்சியில் ஒன்றில் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வுலகை விட்டுப் புனித் ராஜ்குமார் அவர்கள் பிரிந்த போதும் கூட தனது கண்களை தானம் செய்துள்ளார்.
தற்போது அவருடைய கண்கள் பல பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது நவீன சிகிச்சையின் மூலம் புனித் ராஜ்குமார் அவர்களின் கண்கள் நான்கு பேருக்கு பகிரப்பட்டு தற்பொழுது பொருத்தப்பட்டுள்ளது இச்செய்தியை அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சமூக வளைத் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் மேலும் கண் கலங்க நிற்கின்றனர்.