உடல் எடையை அதிரடியாக குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரஷாந்த்.! வைரலாகும் புகைப்படம்

நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அஜித் விஜய்க்கு டப் கொடுத்தவர். இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். நடிகர் பிரசாந்த் 1990இல் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தில் மூலம் முதன்முறையாக அறிமுகம் ஆனார் அதனைத் தொடர்ந்து செம்பருத்தி, ஜீன்ஸ் கண்ணெதிரே தோன்றினால், ஜோடி என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்.

இந்த நிலையில் பிரசாந்த் சமீபத்தில் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளியாகிய வினை விதை ராமா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதுமட்டுமில்லாமல் மோகன் ராஜா இயக்கத்தில் ஹிந்தியில் வெளியாகிய அந்துதான் படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்பொழுது நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக தற்போது தனது உடல் எடையை முழுவதுமாக குறைக்க இருக்கிறார் அதற்காக கடின உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு என அனைத்தையும் கடைபிடித்து வருகிறார்.

தற்பொழுது இவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் பிரசாந்த் இதோ அந்த புகைப்படம்.

prasanth
prasanth

Leave a Comment