இந்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தில் பிரசாந்த் நடித்திருந்தால் அஜித் மற்றும் விஜய்யை ஓரங்கட்டி இருப்பார்.

நடிகர் பிரசாந்த் 90களில் கொடி கட்டி பறந்தவர் இவர் முதன்முதலில் ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் இதனை தொடர்ந்து இவர் நடித்த செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் ஜோடி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடைந்தது.

அதனால் அஜித்-விஜய் எல்லாம் இவருக்கு பின்னால் தான் என்ற நிலை இருந்த காலம், இவருக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் இருந்தது, அதேபோல் திருவிழாக்களிலும் இவரின் புகைப்படம் விற்பனை படுஜோராக நடந்தது, 1990 முதல் 2000 வரை பத்தாண்டுகளில் இவர் நடிப்பில் 30 திரைப்படங்கள் வெளியானது, ஏனென்றால் வருடத்திற்கு 3 படங்கள் நடித்து கொடுப்பார்.

புதிதாக ஏதாவது இயக்குனர் கதை சொல்ல வந்தால் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு மிகவும் பிஸியான நடிகர், ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது போல் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளால் சினிமா வாழ்க்கையே அடியோடு தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. அதனால் இவரின் மார்க்கெட் கிடுகிடுவென சரிந்தது.

2007ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை, அதனால் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை இழந்தார், இந்த நிலையில் சமீபத்தில் ரமேஷ்கண்ணா ஒரு பேட்டியில் உன்னை நினைத்து திரைப்படத்தில் விஜய் விலகிய போது அந்த வாய்ப்பு பிரசாந்திற்கு தான் சென்றது.

அப்பொழுது பிரசாந்த் ஹரி இயக்கத்தில் தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் கால்சீட் கொடுக்க முடியாமல் போனது அதனால் அந்த திரைப்படத்தில் பிரசாந்தால் நடிக்க முடியவில்லை. பிரசாந்த் உன்னை நினைத்து திரைப்படத்தில் நடித்த இருந்தால் அவர் சினிமா வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்புமுனை கிடைத்திருக்கும்.

Leave a Comment