இந்த ஒரு படத்துல நடிக்களான அடுத்த சூப்பர்ஸ்டார் நானாதான் இருந்திருப்பன்!! பரபரப்பை கிளப்பிய சாக்லேட் பாய் பிரசாந்த்!!

0

actor prasanth:தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

விஜய், அஜித்க்கு தற்போது எப்படி ரசிகர் கூட்டத்தை பெற்று பிரபலமாக இருக்கிறாரோ அதே போல தான் 2000ம் ஆண்டில் நடிகர் பிரசாந்த் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார். அது மட்டுமில்லாமல் பெண்களுக்கு பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர்.

இவர் நடித்த திரைப்படத்தில் வின்னர் திரைப்படத்தை இன்றுவரை யாராலும் மறக்க முடியாது ஏனெனில் அந்த அளவிற்கு மெகா ஹிட் அடித்து விட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜாம்பவான், மம்மட்டியான், சாகசம் போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு தோல்வியை மட்டுமே கொடுத்தது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பொன்னர் சங்கர் என்ற திரைப்படத்தை மிக அதிக அளவு முதலீடு போட்டு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்து அதன் காரணமாக அதன் பிறகு அதிக செலவில் பிரசாந்தை வைத்து திரைப்படம் எடுக்க அனைவரும் தயங்கினார்கள்.

இதனால் குடும்ப கதாபாத்திரத்தை விட்டுவிட்டு ஆக்சன் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் பிரசாந்த் ஆனால் அதுவும் அவருக்கு செட் ஆகவில்லை அதனால் அவருடைய சினிமா கேரியரே  மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது.