நிவர் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரகாஷ்ராஜ் செய்த உதவி.! என்ன ஒரு நல்ல உள்ளம்.!! வைராலாகும் வீடியோ..

0

actor prakashraj video viral: தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தாளும் அதன் விளைவுகளால் பல மாவட்டங்களில் பல மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் அந்த வகையில் அவர்கள் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையை வீடியோ காணொளியாக எடுத்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்கள்.

நிவர் புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றுதான் காரைக்கால் நிவர் புயல் தாக்குதலால் மக்கள்  நடு ரோட்டில் நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதனை பார்த்த பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இவர்களுக்கு பெரிய உதவி செய்திருக்கிறார்.

அதாவது தங்க இடம் இன்றி தவித்து வந்த மக்களுக்கு இவர் தனது சொந்த பவுண்டேஷன் மூலம் தங்க வைத்து அவர்களுக்கெலலாம் சாப்பிட உணவு அளித்து உதவியுள்ளார்.

மேலும் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த கருத்தில் இப்போதுதான் நான் நிம்மதியாக தூங்க போகிறேன்.

குறைந்தபட்சம் என்னால் முடிந்தவரை ஒரு சிலருக்காவது நான் உதவினேன் என்று பதிவு செய்திருக்கிறார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜின் நல்ல குணத்தை பார்த்து சினிமா பிரபலங்கள் பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.