மீண்டும் தமிழ் சினிமாவில் வில்லனாக மிரட்டப்போகும் பிரகாஷ்ராஜ்..! அதுவும் இவங்க கூடயா..?

0

actor prakash raj re entry to tamil cinema : தமிழ் திரை உலகில் நெருங்கிய நண்பர்களாகவும் சிறந்த நடிகர்களாகவும் இருந்து வருபவர்கள் தான் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா. இவர்கள் இருவரும் தற்போது எனிமி எனும் திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்கள்.

ஏற்கனவே நடிகர் ஆர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் இணைந்து அவன் இவன் என்ற திரைப்படத்தில் சகோதரர்களாக நடித்துள்ளார்கள்.  ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகுகாக இவர்கள் இருவரும் ஒன்றாக எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை.

பொதுவாக இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்தாலே படம் செம ஹிட்டு தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே அந்த வகையில் இந்த திரைப்படத்தில் மற்றொரு முன்னணி நடிகர் இணைய உள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

திரை உலகில் பல வருடங்களுக்கு பிறகாக மீண்டும் ஒன்றாக இணையும் ஆர்யா மற்றும் விஷால்,  இந்த திரைப்படத்தின் டைட்டில் ஆனது எனிமி என வைக்கப்பட் டுள்ளது. இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தை இருமுகன் ஆனந்த் சங்கர் என்பவர் தான் இயக்கி வருகிறாராம்.

மேலும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் மிக சிறப்பாக முடிவடைந்த நிலையில் தற்போது அதிக பூர்வமாக ஒரு முன்னணி நடிகரை இந்த திரைப்படத்தில் இணைக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அவர் வேறு யாரும் கிடையாது தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் என பல்வேறு திறமையை தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் பிரகாஷ்ராஜ் தான் மற்றொரு நடிகராம்.

இவ்வாறு ஏழு வருடங்களுக்கு பிறகாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீண்டும் சினிமாவில் களம் இறங்குவது ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

aarya vishaal
aarya vishaal