பிரபல நடிகர் கைவிட்ட படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் பிரதீப் ரங்கநாதன்.!

0
pradeep-ranganadhan
pradeep-ranganadhan

தற்பொழுது தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரதீப் ரங்கநாதன் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. பிறகு கடைசியாக மூன்று ஆண்டுகள் கழித்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் தான் லவ் டுடே.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றினை பெற்றது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்த நிலையில் இதன் மூலம் பிரதீப் கோலிவுட்டில் பிரபலமானார். வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 75 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை அடுத்து தற்பொழுது பிரதீப் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒரு கதை கூறியுள்ளதாகவும் விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் கூறப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் நடிகர் விஜய்க்கும் கதை கூறிய அவருக்கும் பிடித்ததாகவும் தகவல் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி சிம்பு நடிக்க இருந்த திரைப்படம் தான் கொரோனா குமார். இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தினை கோகுல் இயக்க இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் பேசப்பட்டு வந்தது.

ஆனால் சில காரணங்களால் சிம்பு இந்த படத்தில் இருந்து வெளியேறிய நிலையில் கொரோனா குமார் படம் கைவிடப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தில் சிம்பு நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பிரதீப் நடிக்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.