பிரபலதிற்க்காக சிவாஜியை வைத்து கிண்டல் செய்த பரபல டிவி நிகழ்ச்சி..! ஆத்திரத்தில் கண்டித்து பேசிய பிரபு குடும்பத்தினர்..!

0

actor prabu latest speech: சமீபத்தில் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றை காட்டிலும் மக்கள் அதிக ஆர்வமாக பார்த்து வருவது ரியாலிட்டி ஷோ தான் அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் கலக்கப்போவது யாரு.

இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஒன்பதாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலமான நடிகர்களை வைத்து கலாய்ப்பது மற்றும் காமெடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து காமெடி செய்துள்ளார்கள் அதாவது சிவாஜி கணேசன் நடித்த தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவாஜி செய்யும் ஆக்ஷ்ன்களை ஜெயச்சந்திரன் என்பவர் கிண்டல் செய்து நடித்துள்ளார்.

இவ்வாறு இந்த காட்சியை பார்த்த நடிகர் பிரபு அவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவர்களை கண்டிக்கும் வகையில் சமூக வலைதள பக்கத்தில் அவர் பேசிய வீடியோ ஆனது மிக வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சிவாஜி என்பவர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் மட்டுமல்லாமல் ஒரு பழம்பெரும் நடிகர் என போற்றப்பட்டவர். இவ்வாறு பட வாய்ப்பிற்காக இவ்வளவு பெரிய மனிதரை கேலி செய்வது தவறு என நடிகர் பிரபு ஆத்திரம் அடைந்துள்ளார்.

இவ்வாறு இந்த டிவி நிகழ்ச்சி செய்த செயலால் சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்லாமல் சிவாஜியின் குடும்பத்தினருக்கும் பெரும் மன கஷ்டம் தான். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் நடுவராக ஆதவன் என்பவர் சிவாஜி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.