நடிகர் பிரபு மகளுக்கு திருமணம்.. மாப்பிள்ளை அந்த இயக்குனரா.? வெளியான தகவல்

Prabhu : நடிப்பிற்கு அடையாளமாக பார்க்கப்படுபவர் சிவாஜி. இவர் வெற்றி / தோல்வி போன்றவற்றை பார்க்க மாட்டார் ஒவ்வொரு படத்தையும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் அதனாலையே நடிகர் திலகம் என செல்ல பெயரை வைத்து அழைப்பது வழக்கம்.

அவரை தொடர்ந்து அவரது மகன் பிரபு சினிமா உலகில் முதலில்  அப்பா சிவாஜி உடன் இணைந்து படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தனித்து படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தார் தற்பொழுது வயது முதிர்வின் காரணமாக டாப் வீரர்களின் படங்களில் குணசத்திர கதாபாத்திரம் அப்பா, சித்தப்பா  மற்றும் முக்கிய ரோலில்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார்.

மெகா ஹிட் அடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா.! அடக்கடவுளே இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே..

இவரைத் தொடர்ந்து அவரது மகன் விக்ரம் பிரபுவும் திரையுலகில் ஹீரோவாக நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரைய்டு திரைப்படம் சுமாராக ஓடியதை தொடர்ந்து அடுத்தடுத்த பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் பிரபுவின் மகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாப்பிள்ளை வேறு யாரும் அல்ல இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்து ஜொலித்துவரும் ஆதிக்க ரவிசந்திரன் தான்.. இவர் கடைசியாக எடுத்த மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் படத்தில் ஹீரோயின்களை செலக்ட் பண்ணுவது இவரா.? வாழ்க்கை ஓட்டணும்னா சில தியாகங்கள் செஞ்சு தான் ஆகணும்

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா 2009 ஆம் ஆண்டு குணால் என்பவரை திருமணம் செய்து அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது தற்பொழுது ஆதிக் ரவிசந்திரனுடன் திருமணம் நடக்க இருக்கிறது ஆனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரபு குடும்பத்தில் இருந்து வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

aadhik ravichandran
aadhik ravichandran