தெலுங்கு சூப்பர்ஸ்டார் வீட்டு பெண்ணை மணக்க உள்ளாரா நடிகர் பாகுபலி பிரபாஸ்!! விவரம் இதோ.

0

Actor Prabhas to marry Telugu superstar Daughter: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர் பர்ஃபெக்ட் போன்ற வெற்றி படங்கள் மூலமாக பிரபலமானார். இவர் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். இருவருக்கும் காதல் என்று பேசப்பட்டு வந்தது. மேலும் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று திரையுலகமே எதிர்பார்த்தது. ஆனால் தற்போது அனுஷ்காவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுபோலவே பிரபாஸிர்க்கும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்துப் பெண்ணை மணக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகளான நிகாரிகாவை மணக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இந்த படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மேலும் சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். நிஹாரிகா நடிகை மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர்.
ஆனால் நடிகை நிஹாரிகா இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.