பொது இடத்தில் மடிபிச்சை எடுத்த நடிகர் பார்த்திபன்..! யாருக்காக தெரியுமா..?

0
parthipahn
parthipahn

தமிழ் சினிமாவில் தன்னை தனித்துவமாக காட்டி வரும் நடிகர் மற்றும் இயக்குனர் என்றால் அவர் பார்த்திபன் தான் அந்த வகையில் இவர் ஒவ்வொரு விஷயங்களையும் வித்தியாசமான முறையில் செய்வது வழக்கம் அந்த வகையில் தான் நடிக்கும் திரைப்படங்களாக இருந்தாலும் சரி தான் இயக்கும் திரைப்படங்களாக இருந்தாலும் சரி அதில் வித்தியாசத்தை காட்டுவதில் வல்லவர்.

அந்த வகையில் இவர் கடைசியாக இவருடைய இயக்கத்தில் உருவான ஒத்த செருப்பு என்ற திரைப்படத்திற்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தது மட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்பட வேலைகளில் அவர் மிகவும் பிசியாக இருக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் பற்றிய எந்த ஒரு அப்டேட்டுகளும் வெளிவராமல் இருந்து வந்தன.

இந்நிலையில் சென்னையில் 46வது சர்வதேச புத்தக காட்சி ஒன்று நடத்தப்பட்டது இந்நிலையில் இந்த கண்காட்சி நந்தனம் மைதானத்தில் ஜனவரி 6 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது மேலும் இந்த புத்தக கண்காட்சிக்கு வந்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் சிறைவாசிகளுக்கு புத்தகம் வாங்க அங்கு ஒவ்வொரு அரங்காக சென்று மடிப்பிச்சை கேட்டு புத்தகத்தை பெற்றுள்ளார்.

இவ்வாறு அவர் செய்த செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்தது மட்டும் இல்லாமல் மிகவும் ரசிகர்களின் மனதை கண்கலங்க வைத்து விட்டது என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் பார்த்திபன் சிறைவாசிகளின் மனநிலையை மாற்றுவதற்காக எவ்வாறு அயராது போராடி வருகிறார் என்பதை தெரிந்து கொண்டு பல்வேறு மக்கள்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் என பலரும் இதற்கு உதவி செய்தது மட்டுமில்லாமல் இவருடைய இந்த செயலை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு நன்மை செய்துள்ளார்கள்.