கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட சூரி மகள்.!

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அது போல இந்தியாவிலும் தற்போது அதிகரித்துள்ள நிலையில், குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் அதன் பலத்தை காட்டிக்கொண்டு இருக்கிறது.

அதனை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஏப்ரல் 14 தேதி வரை நிடித்துள்ளனர். இருப்பினும் மக்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வெளியில் சுற்றித் திரிகின்றனர். எச்சரிக்கை நடவடிக்கையாக ஆரம்பத்தில் போலீஸ்காரர்கள் பணிவுடன் கூறிவந்தனர். அதனைக் கேட்டு அடங்காமல் மக்கள் வெளியே சுற்றியதால் போலீசார் தற்போது தடியடியில் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலர் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக நடிகை மற்றும் நடிகர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகரான சூரியின் மகள் தற்பொழுது விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment