பிரபாஸின் சலார் திரைப்படத்தில் இணைந்த முன்னணி பாலிவுட் நடிகை..அட இவங்க செம்மயாச்சே …

0

தமிழில் பிரமாண்டமாக பல கோடி பட்ஜெட்டில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ். இவர் தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரசாந்த் நில் தற்பொழுது திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.  இந்த திரைப்படத்திற்கு பிறகு பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரபாஸை வைத்து அடுத்த திரைப்படமான சலார் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.

பாகுபலி எந்த அளவிற்கு அதிகபடியான பட்ஜெட்டில் உருவானதோ அதேபோல் இந்த திரைப்படம் பிரமாண்டமாக பல கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக நடிகை சுருதிஹாசன் நடிக்கவுள்ளார். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வந்ததால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இப்படிப்பட்ட நிலையில் அடுத்த மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.

இத்திரைப்படத்தில் பிரபாஸ் மற்றும் ஸ்ருதிஹாசனை தொடர்ந்து இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதற்காக பாலிவுட் நடிகை ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.  அந்த நடிகை ஓகே சொன்னால் விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

ஆம்,அந்த நடிகை வேறுயாருமில்லை பாலிவுட் திரைவுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் வாணி கபூரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.  அதோடு இத்திரைப்படத்தில் இவர் கமிட்டானால் தெலுங்கில் இதுதான் இவரின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.