நல்லது சொன்னா எவண்டா கேக்குறீங்க..! தன்னை கேலி செய்த நபருக்கு சரியான பதிலடி கொடுத்த நகுல்..!

0

actor nakul latest speech viral in social media: தமிழ் சினிமாவில்  பல்வேறு சகோதர சகோதரிகள் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் சூர்யா கார்த்திக், ஜீவா ரமேஷ், நக்மா ஜோதிகா, சிம்ரன் மோனல், போன்ற பலரும் சகோதர சகோதரிகள் தான் அந்தவகையில் தேவயானியின்  சகோதரர் தான் நகுல் இவரும் திரை உலகில் பிரபலமான நடிகராக  இருப்பவர்தான்.

இவர் ஆரம்பத்தில் உடல் எடை கூடி போய் பார்ப்பதற்கு மோசமாக இருந்தது மட்டுமல்லாமல் அப்பொழுதும் பாய்ஸ் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்துவிட்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார்.

அந்த வகையில் இவர் நடித்த காதலில் விழுந்தேன் மாசிலாமணி  இன்னும் பல திரைப்படங்கள்  மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் செய்  ஆனால் இந்த திரைப்படம் இவருக்குத் தகுந்த வெற்றியை கொடுக்கவில்லை.

நடிகர் நகுல் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் ஒரு பாடகரும் கூட அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் 9 பாடல்களை பாடி உள்ளார். அதில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த அந்நியன் திரைப்படத்தில் கூட காதல் யானை என்ற பாடலை நகுல் தான் பாடி உள்ளார்.

மேலும் நமது நகுல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும்  நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார் அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் மிகப்பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் கூட நமது நகுல் தான் நடுவராக இருந்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது என்னதான் ஒரு குழந்தைக்கு அப்பா ஆனாலும் தனது பிட்னஸ் விஷயத்தில் மட்டும் நகுல் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில்  ரசிகர் ஒருவர் இன்று நான் உடற்பயிற்சி செய்து விட்டேன் நீங்கள் செய்தீர்களா என்று கேட்டுள்ளார் இதற்கு பதில் அளித்த நகுல் திருப்பதிக்கே லட்டா நான் பண்ணல நீங்க பண்ணுவீங்களா..? பண்ண மாட்டீங்களா.? என கேட்டிருந்தார்.

இதனை பார்த்து ரசிகர் ஒருவர் உன் வேலையை நீ பாரு பண்ணுவியா பண்ண மாட்டியா ச்சீ என கமெண்ட் செய்துள்ளார். இதை பார்த்த  பெண் ஒருவர் நான் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக தான் தற்போது கர்ப்பமாக உள்ளேன் ஆகையால் தினமும் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என கேட்டு நினைவூட்டியதற்க்கு மிக்க நன்றி என நான் நகுலிடம் ஒரு பெண் கூறியிருந்தார் இந்த பதிவினை நகுல் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

nagul-1
nagul-1