சம்பளம் இல்லை, நல்ல துணி இல்லை, உணவு இல்லை டிரைவர் வேலை பார்க்கிறேன் பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்.!

தமிழ்சினிமாவில் சங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல், இவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பி ஆவார். பாய்ஸ் படத்தில் நடித்தபோது இவர் மிகவும் உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்தார்.

அதனால் இவருக்கு பட வாய்ப்பு எதுவும் அமையவில்லை, உடனே தீவிர உடற்பயிற்சி செய்து உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து அதிரடியாக உடல் எடையைக் குறைத்தார், அதன் பின்பு காதலில் விழுந்தேன் மாசிலாமணி தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் தற்போது டிவி தொலைக்காட்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார், இதனையடுத்து சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதுவும் டிரைவர் கெட்டப்பில் இருக்கிறார், அந்த புகைப்படத்தில் கேப்டனாக டிரைவர் ஆகிவிட்டேன் சம்பளம் இல்லை, இது அடிமைத்தனம், சாப்பாடு இல்லை நல்ல உடை இல்லை, மோசமான பாஸ், நம்புங்கள் என மிகவும் நக்கலாக பதிவிட்டுள்ளார்.

nagul
nagul

Leave a Comment