பாரம்பரிய உடையில் பிக் பாஸ் முகேன் ராவ்!! அழகான நடிகை வேலன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். !! தற்ப்போது ட்ரெண்டிங்கில்.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பொதுவாக சினிமாவில் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வரும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம் என பல மொழியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் முகேன் ராவ்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பு முகேன் ராவ் பல ஆல்பம் சாங்குகள் பாடுவது மற்றும் அதில் நடனமாடுவது போன்றவற்றை செய்து வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு திரைப் படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதோடு இவர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். அந்த வகையில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்நிலையில் நிகழ்ச்சிக்குப் பிறகு முகின் ராவ் கவின் இயக்கத்தில் வேலவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தில் காமெடி நடிகர் சூரி மற்றும் பிரபு உள்ளிட்டவர்களும் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு சூரி மற்றும் முகின் ராவ்  இருவரும் சேட்டை செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.

முகின் ராவின் வேலன் திரைப்படம் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இத்திரைப்படத்தை திஸ்கை மேன் இன்டர்நேஷனல் கலைமகன் தயாரித்து வருகிறார். அந்தவகையில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் முகின்ராவ் வேஷ்டி சட்டை என்று  பாரம்பரிய உடையில் இருக்கிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment