பப்ஜி வீரர் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்!! இதுவரை எந்த காமெடி நடிகரும் போடாத கெட்டப் !! வைரலாகும் புகைப்படம்.

0

காமெடி நடிகராக குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்த அவர்தான் நடிகர் மொட்ட ராஜேந்திரன். இவரின் எதார்த்த காமெடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த ஹீரோவாக நடித்து வரும் நடிகர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதேபோல் காமெடி நடிகராக நடித்து வருபவர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு இருந்து வருகிறது.

அந்தவகையில் தனது காமெடி திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த மொட்டை ராஜேந்திரன் தொடர்ந்து வித்தியாசமான பல திரைப்படங்களில் நடித்து வெற்றியை கண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பவுடர் பட இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் பப்ஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் வித்யா பிரதீப், நிகில் முருகன் சிங்கப்புலி, மொட்ட ராஜேந்திரன் உட்பட இன்னும் பல நடிகர், நடிகைகளும் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் பப்ஜி வீரராக நடித்து அசத்தியுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் முழுவீச்சில் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது என்றும் கொரோனாவின் இரண்டாவது அலையால் தடைப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி உள்ளது என்றும் கூறியுள்ளார்கள்.

mottai rajenthiran 1
mottai rajenthiran 1

அந்த வகையில் தற்பொழுது மொட்டை ராஜேந்திரனின் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகிறது. மொட்டை ராஜேந்திரன், வித்யா பிரதீப் போன்றவர்களை தொடர்ந்து முன்னணி நடிகர் நடிகைகளான பாலாஜி பாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுன், ஐஸ்வர்யா தத்தா, மைக் கோபி, அனித்திரா நாயர்,சாந்தினி தேவா, லட்சுமி, ஜூலி, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்கள்.

mottai rajenthiran
mottai rajenthiran

மொட்டை ராஜேந்திரனின் பப்ஜி காட்சியே இந்த திரைப்படத்தின் மீதான அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் தூண்டியுள்ளது. இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.