80-களில் கொடிகட்டி பரந்த மோகன் ரசிகர்களுக்காக தற்பொழுது எடுத்துள்ள அதிரடி முடிவு.! குஷியில் ரசிகர்கள்

80காலகட்டத்தில் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் மோகன் ஆவார். மூடுபனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், தீராத விளையாட்டுப் பிள்ளை, பயணங்கள் முடிவதில்லை, லாட்டரி டிக்கெட் இன்னும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இவர் பிரபலம் அடைவதற்கு முக்கிய  காரணம் இவருடைய படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் தான் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என தான் கூறவேண்டும். இவரை பலர் மைக் மோகன், கோகிலா மோகன் என தான் அழைப்பார்கள். இவர் நடித்து வந்த காலகட்டத்தில் ரஜினி,கமலுக்கு போட்டியாக திகழ்ந்தார்.

இவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் திரைப்படத்தில் நடிக்க செலவிடுவாராம். இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகராக எவ்வளவு பிரபலமடைந்துள்ளாரோ அதுபோலவே தயாரிப்பாளராகவும் தனது சிறந்த திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

mohan

சில வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த மோகன் தற்போது இவருடைய ரசிகர்களால் இப்பொழுது ஒரு படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே அவருடைய ரசிகர்கள் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவருமென எதிர்பார்கின்றனர்.

mohan

Leave a Comment

Exit mobile version