தனது இறுதி படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் மனோபாலா.! கண்கலங்க வைக்கும் வீடியோ.!

தமிழ் திரை உலகில் பல வருடங்களாக இயக்குனர்,தயாரிப்பாளர்,நடிகர் என பல திறமைகளைக் கொண்டு வலம் வந்த நடிகர் தான் மனோபாலா இவர் நேற்று முன் தினம் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தியை கேட்ட பல பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவிக்க இவரது வீட்டிற்கு சென்று அங்கு பத்திரிகையாளர்களிடம் இவரைப் பற்றி பல தகவல்களை ரசிகர்களுக்கு கூறினார்கள்.

அதேபோல் ரசிகர்களும் இவர் மறைந்ததை தாங்க முடியாமல் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எல்லாம் எடுத்து பகிர்ந்து வந்தார்கள் அதையும் நாம் பார்த்து இருப்போம்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடிகர் பாரதிராஜாவிடம் உதவியாளராகவும், துணை இயக்குனராகவும் பல வருடங்களாக பணியாற்றி அதன் பின்பு பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் மனோபாலா கடந்த சில வருடங்களாகவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார் ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மிகவும் உடல் நிலை மோசமான நிலையில் திடீரென தனது வீட்டிலேயே உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் நடிகர் மனோபாலா தனது பிறந்த நாளை கடைசியாக படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் நடிகர் மனோபாலா மற்றும் யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் மனோபாலா பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் நடிகர் மனோபாலாவிற்கு கேக் வெட்டி கோலாகலமாக படக்குழுவே கொண்டாடியுள்ளார்கள் ஆனால் அவர் மறைந்த செய்தியை கேட்ட பலரும் நீங்கள் எங்களுடன் நடிக்கும் பொழுது எங்களை எப்பொழுதுமே சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்கள் நீங்கள் மறைந்த செய்தியைக் கேட்க எங்களால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை என்றும் பல பிரபலங்களும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment