கண்ணீர் மல்க நடிகர் மனோபாலாவிற்கு சினிமா பிரபலங்கள் போட்ட பதிவு.!

0
manobala
manobala

தமிழ் திரை உலகில் பல வருடங்களாக நடித்து இன்று திடீரென உயிரிழந்த நடிகர் தான் மனோபாலா இவர் தமிழ் திரையுலகில் தனது ஆரம்ப காலகட்ட திரைப்பயணத்தில் நிறைய திரைப்படங்களை இயக்கிக் கொண்டே இருந்தார் அதன் பின்பு தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் உருவம் எடுத்தார்.

அவ்வாறு பார்த்தால் இவர் இயக்கியும் தயாரித்த படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும்.மேலும் இவரது இறப்பிற்கு பல சினிமா பிரபலங்களும் நேரிலும் சமூக வலைதள பக்கங்கள் மூலமும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் பல பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் தற்பொழுது இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து மனோபாலாவிற்காக தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்த பல பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்த பதிவு சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இவ்வளவு வேதனையாக இருக்கிறது. அதேபோல் தான் நாங்கள் பல வருடங்களாக இவர் நடித்த திரைப்படங்களை விரும்பி பார்த்து வருகிறோம்.

எங்களால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை திடீரென இவரது இழப்பு எங்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள். தற்பொழுது பிரபலங்கள் போட்ட பதிவுதான் இணையத்தில் மிக வேகமாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.