காமெடி நடிகர் மனோபாலா காலமானார்.! சோகத்தில் திரையுலகம்

தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமாக வலம் வந்தவர் மனோபாலா. இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் 16 தொலைக்காட்சி தொடர்களையும் மூன்று தொலைக்காட்சி திரைப்படங்களையும் இயக்கி உள்ளார் இதுவரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்  முதலில் இயக்குனராக “ஆகாய கங்கை” என்னும் படத்தை இயக்கிய அறிமுகமானார்.

அதன் பிறகு ரஜினியின்  ஊர் காவலன், என் புருஷன் எனக்கு மட்டும் தான், வெற்றிப்படிகள், கருப்பு வெள்ளை, சிறகுகள் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டு இருந்த இவர் 1994 ஆம் ஆண்டு தாய்மாமன் என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

ஒரு கட்டத்தில் காமெடியன்னாக ரஜினி, அஜித், விஜய், தனுஷ், ராகவா லாரன்ஸ் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்தார். இதனால்  திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக  வந்தார் மனோபாலா. இவருக்கு கடந்த சில வருடங்களாக பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார்.

இதில் தன்னுடன் பயணித்த நடிகர் நடிகைகள் குறித்தும், தான் இயக்கி, நடித்த படங்கள் குறித்தும், புதிய படங்களின் விமர்சனம் போன்றவற்றை  வெளிப்படையாக பேசி வந்தார் இப்படிப்பட்ட மனோபாலா கல்லீரல் பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு இருந்தார் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.

இந்த விஷயம் தற்பொழுது பிரபலங்களையும் தாண்டி ஒட்டு மொத்த தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.  பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர் வர முடியாதவர்கள் சமூக வலைதள பக்கங்களில் மனோபாலா பற்றி தனக்கு தெரிந்த விஷயங்கள் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment