இணையத்தில் வைரலாகி வரும் மறைந்த நடிகர் மனோ பாலாவின் இளம் வயது புகைப்படங்கள்.!

0
manobala
manobala

இன்று தமிழ் திரை உலகில் பணியாற்றி வரும் பல பிரபலங்களை வருத்தத்தில் ஆழ்த்திய செய்தி என்றால் அது நடிகர் மனோபாலாவின் திடீர் மரணம் தான். கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இவருக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பணியாற்றி வருபவர் இவரது திடீர் மறைவிற்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும் இவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மனோபாலா சென்னையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்பொழுது எடுத்த புகைப்படங்களை கூட நாம் இணையத்தில் காணலாம். மேலும் கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று தனது வடபழனியில் இருக்கும் வீட்டில் உயிரிழந்து விட்டார்.

இவரது இறப்பு குறித்து நடிகர் மனோபாலாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்,வீடியோக்களை வெளியிட்டு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் பல பிரபலங்களும் நடிகர் மனோபாலா தமிழ் சினிமாவின் பொக்கிஷம் அவருடன் பழகிய நாட்கள் எல்லாம் ஜாலியாக தான் கண்டிப்பாக இருக்கும் என பல விதமான தகவல்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் நடிகர் மனோபாலா தமிழ் சினிமாவில் இயக்குனர்,தயாரிப்பாளர், காமெடி நடிகர் போன்ற பன்முக திறமை கொண்டவர் இவரது இறப்பு தாங்க முடியாமல் தற்பொழுது பல பிரபலங்களும் நேரில் வந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்களாம். இந்நிலையில் நடிகர் மனோபாலாவின் இளம் வயது புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

manobala
manobala