பிறந்த உடனே தனது மகனுடன் போட்டோ ஷூட் நடத்திய மகத்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மகத். இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பதால் தனுஷின் மூலம் பல திரைப்படங்களில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாக ஒருவர் சினிமாவில் அறிமுகமாகிய உடனே பிரபலமடைந்த விடமுடியாது அந்த வகையில் மகத்துவம் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா உள்ளிட்ட இன்னும் ஒரு சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அந்த வகையில் மகத்த்திற்கு ஒரு சில திரைப்படங்களுக்கு மேல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பிரபலம் கிடைத்தாலும் நெகட்டியு பெயர்தான் பெற்றிருந்தார். அதோடு இந்நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேறி விட்டார். அந்த வகையில் பல பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் இவர் போகுமிடமெல்லாம் திட்டி திட்டி வந்தார்கள்.

ஆனால் சிம்பு மட்டும் இவரை கைவிடவில்லை. அதோடு இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நல்லவனா பேரெடுத்த கெட்டவன் டா உள்ளிட்ட இன்னும் ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார். இந்நிகழ்ச்சி முடிந்த சில மாதங்களிலேயே மகத் தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார்.

அந்த வகையில் தற்போது மகத் மற்றும் பிராச்சி தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகத் தனது மனைவி மற்றும் மகனுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment