நடிகர் மாதவனின் முழு சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தனது பயணத்தை தொடர்ந்தவர் நடிகர் மாதவன் அதனை தொடர்ந்து தமிழில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.

அந்த வகையில் என்னவளே, மின்னல், டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டாய், ரன் போன்ற படங்கள் காதல் மற்றும் சிறிதளவு ஆக்சன் படங்களாக அமைந்தன. இதனால் அவர் பெண்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார் இப்படி போய்க்கொண்டிருந்த ஒரு கட்டத்தில் ஆக்சன் திரைப்படங்களில் நடித்தார்.

அந்த வகையில் ஆயுத எழுத்து, தம்பி போன்ற படங்கள் இவருக்கு பெரும் தோல்வியை தர ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனையடுத்து அவர் மற்ற மொழிகளில் ஆர்வம் காட்ட தொடங்கினார் அந்த வகையில் பெரிதும் ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தினார்.

சில வருடங்கள் கழித்து மீண்டும் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் இறுதி சுற்று படத்தில் நடித்து அசத்தினார். இந்த படம் நல்ல வெற்றி பெற்றதை தொடர்ந்து இவர் தமிழில் விக்ரம் வேதா மற்றும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மிரட்டினார்.

நடிகர் மாதவன் 1999 ஆம் ஆண்டு சரிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் வேதாந்த் ஒரு மகன் இருக்கிறார்.  இந்த நிலையில் நடிகர் மாதவனின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் 100 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளிவருகின்றன.

Leave a Comment