தோனி மகளை மிரட்டிய 16 வயது சிறுவன் குறித்து நடிகர் மாதவன் போட்ட டுவிட்!! இதோ.

0

actor madhavan tweet about dhoni daughter threatening issue tweet viral:தற்போது துபாயில் 13வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக ரசிகர்கள் பலர் வருந்தியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கலாய்த்தும் வந்தனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனியின் மகளுக்கு அவரது மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் மிரட்டல் விடுத்திருந்தனர். தோனியின் ஐந்து வயது மகளான சிவாவிற்கு பாலியல் மிரட்டல் விடுத்த இந்த செய்தி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

இதனை கருத்தில் கொண்டு தோனியின் வீட்டிற்கு போலிஸார் பலத்த பாதுகாப்பு அளித்திருந்தனர். பின்பு தோனி அளித்த புகாரின் அடிப்படையில் குஜராத்தை சேர்ந்த 16 வயது ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் போலீசார் விசாரணையில் அந்த சிறுவன் கூறியது தோனி அவர்கள் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடி தோல்வியடைந்ததால் மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

இதற்காக நடிகர் மாதவன் போலீசார் அதிரடியாக எடுத்த நடவடிக்கை குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது “எம்எஸ் தோனியின் மகளுக்கு எதிராக அச்சுறுத்தல்களை வெளியிட்டதற்காக சிறுவனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எனது பாராட்டுகள் கடவுள் மட்டும் சட்டத்திற்கு பயப்படாமல் இதுபோன்ற முகமற்ற அரக்கர்கள் தங்களை யார் என்ன செய்ய முடியும்  என்று நினைத்து இணையதளத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

சிறுவர்களாக இருந்தாலும் சரி தகுந்த நடவடிக்கை தேவை என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த ட்விட்டர் பதிவு.