நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவனின் மகன்!! குவியும் பாராட்டு!! வைரலாகும் புகைப்படம்.

madhavanvedhanath
madhavanvedhanath

சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் தங்களது வாரிசுங்களையும் எப்படியாவது சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர், நடிகைகளாக ஆக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் வளர்த்து வருகின்றனர்.

ஆனால் அவற்றில் முற்றிலும் மாறாக பிரபல நடிகரும் சமுக ஆர்வலருமான மாதவன் தனது மகன் வேதாந்ததை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்தி உள்ளார். இவர் நீச்சல் வீரராக இருந்து வருகிறார்.

VEDANTH
VEDANTH

இவர் சர்வதேச விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு பதக்கங்களை பெற்று வருகிறார். லவிட்டன் ஓபன் ஸ்விம்மிங் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார் நடிகர் மாதவன் மகன்.

VEDHANTH
VEDHANTH

அந்த புகைப்படத்தை தற்போது இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெருமையோடு ஷேர் செய்துள்ளார். இந்தியாவிற்காக விளையாடி வெண்கல பதக்கத்தை பெற்ற நடிகர் மாதவனின் மகனுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

madhavan son
madhavan son