ரஜினியின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடும் நடிகர் லிவிங்ஸ்டன்.. மனைவியின் உயிரை காப்பாற்றிய தெய்வம்

Actor Livingston Interview on Rajinikanth: பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் என்னுடைய மனைவி உயிருடன் இருப்பதற்கு காரணம் ரஜினிகாந்த் தான் என எமோஷ்னலாக பேசியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 1988ல் வெளியான பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன்.

நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுதுபவர் ஆகவும் பணியாற்றி வந்தார். ஹீரோவாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் குணசேத்திர கேரக்டர்களிலும், காமெடியனாகவும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மீனாவால் முத்துவுக்கு வந்த சோதனை.. மனோஜ் ரோகினியை மிரளவைத்த விஜயா..

மேலும் சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் ரஜினியின் நண்பராக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் அவர் ரஜினிகாந்த் குறித்து பேசி உள்ளார். அதாவது, என்னுடைய மனைவிக்கு திடீரென்று மாரடைப்பை ஏற்பட்டது உடனடியாக ஆபரேஷன் செய்யவில்லை என்றால் காப்பாற்றுவது ரொம்ப கடினம் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

அப்பொழுது என்னிடம் பணம் இல்லை ஏற்கனவே நான் நிறைய கடனில் இருந்தேன் எங்கு வாங்குவது என்ன பண்ணுவது என்று புரியாமல் கவலையில் இருந்தேன் அது மட்டும் இல்லாமல் அப்பொழுது நான் லால் சலாம் படத்தில் ரஜினியுடன் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த தகவல் எப்படியோ ரஜினி சார் காதில் விழுந்திருக்கிறது இதை அறிந்த அவர் என்னை கூப்பிட்டு உங்கள் மனைவிக்கு என்ன பிரச்சனை? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்று கேட்டார்.

நானும் அவரிடம் மனைவியின் உடல்நிலை குறித்து சொன்னேன் உடனே அவர் 15 லட்சம் ரூபாயை என்னிடம் கொடுத்து உங்கள் மனைவியை காப்பாற்றுங்கள் நீங்கள் எனக்கு தம்பி மாதிரி எதுவாக இருந்தாலும் கேளுங்கள் இன்னும் பணம் தேவைப்பட்டாலும் என்னை கூப்பிடுங்கள் நான் தருகிறேன் என்று சொன்னார். அவர் அப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை உடனடியாக என் மனைவிக்கு ஆப்ரேஷன் செய்து அவர் குணமாகிவிட்டார்.

லிப்லாக் காட்சிக்கு இந்த நடிகர் ஓகே.. கோலிவுட் நடிகர்கள் நோ.. பிரியா பவானி சங்கர் பேட்டி

இப்பொழுது என் மனைவி உயிருடன் இருப்பதற்கு காரணம் ரஜினி சார் தான். பைபிளில் ஒரு வாசகம் இருக்கும் ஒரு கை செய்யும் உதவி மறுக்கைக்கு தெரியக்கூடாது என்று சொல்வார்கள் அது ரஜினி சார் தான். அவர் எனக்கு மட்டுமல்லாமல் எவ்வளவு பேருக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார் ஆனால் அது பெரும்பாலும் வெளியிலேயே தெரியாது அவர் ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். எங்கள் குடும்பத்திற்கு அவர் கடவுள் மாதிரி என்னுடைய வீட்டில் சாமியரையில் அவருடைய புகைப்படம் தான் இருக்கிறது. என்னுடைய பிள்ளைகளும் அவரை தெய்வமாகத்தான் பார்க்கிறார்கள் என்று மிகவும் எமோஷ்னலாக பேசியுள்ளார்.

Exit mobile version