தன்னைவிட 4 வயது மூத்த சீரியல் நடிகையை திருமணம் செய்துக் கொண்ட பசங்க பட கிஷோர்.! வைரல் புகைப்படம்..

பசங்க படத்தின் மூலம் சிறுவனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கிஷோர் சமீபத்தில் தன்னைவிட நான்கு வயது மூத்த சன் டிவி சீரியல் நடிகையை காதலிப்பதாக சில தினங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் தற்போது திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை கண்ட திரைப்படம் தான் பசங்க.

இந்த படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கிஷோர் இதன் மூலம் பல விருதுகளையும் பெற்ற இவர் மேலும் பசங்க 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கிஷோர் இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட இவருக்கு சொல்லும் அளவிற்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிஷோர் சமீபத்தில் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து வருவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

நடிகை ப்ரீத்தி குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆஃபீஸ் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் இதனை தொடர்ந்து லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட பல சன் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் தற்பொழுது நடித்து வருகிறார்.

kishore 1

கடந்த ஆண்டு தன்னுடைய காதலி பிரீத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கிஷோர் தெரிவித்திருந்த நிலையில் அதில் “உன்னை திருமணம் செய்யும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.. அடுத்த வருடம் நாம் இருவரும் கணவன் மனைவியாக பிறந்த நாளை கொண்டாடுவோம்’ ஐ லவ் யூ அச்சுமா.. என்று குறிப்பிட்டிருந்தார்.

kishore

இந்நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்துள்ள நிலையில் கிஷோரை விட நான்கு வயது பெரியவர் தான் நடிகை ப்ரீத்தி எனவே ரசிகர்கள் இவரை கிண்டல் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய திருமண புகைப்படம் மற்றும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version