யார் சொன்னாலும், எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த செயலை மட்டும் நான் செய்யவே மாட்டேன். என பிடிவாதமாக இருந்த கவுண்டமணி.!! சூப்பர் பா..

0

தமிழ் சினிமாவில் ஏராளமான காமெடி நடிகர்கள் தற்போது வரையிலும் மறக்க முடியாத அளவிற்கு சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஆணித்தரமாக ஒரு இடம்பிடித்த நடிகர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் எந்த திரைப்படமாக இருந்தாலும் காமெடி என்றால் அதில் பெரும்பாலும் கவுண்டமணி தான் நடித்து வருவார்.

இவரின் நக்கல், நையாண்டி என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் முக்கியமாக கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்கள் இருவரின் ஜோடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தது. இவ்வாறு கவுண்டமணி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்ததால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நடிகர்களைவிடவும் கவுண்டமணி சொகுசாக வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்பட்டது. ஏனென்றால் தயாரிப்பாளர்கள் ஹீரோக்களை விடவும் கவுண்டமணியை தனியாகக் கவனிப்பார்க்கலாம்.

இவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்ததால் இவருக்கு தமிழையும் தாண்டி மற்ற மொழித் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது. பொதுவாகவே ஒரு நடிகர் ஒருவர் சிறந்த நடிப்புத் திறமையினால் தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களை தத்து வந்தால் அவருக்கு  மற்ற மொழித் திரைப்படங்களிலும் படிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பது வழக்கமான ஒன்றுதான்.

அந்தவகையில் நடிகர்களும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து உலக அளவில் பிரபலமடைய வேண்டும் என்றும், அதிகபடியான சம்பவங்களை பெற வேண்டும் என்று நினைப்பார்கள் இது தற்பொழுது வரையிலும் வழக்கமாக இருக்கிறது.

ஆனால் கவுண்டமணி மட்டும் மற்ற நடிகர்களை போல நடிக்காமல் தமிழில் மட்டும்தான் நடிப்பேன் என மிகவும் உறுதியாக இருந்தாராம் இவ்வாறு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வந்த இவருக்கு தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதோடு கோடிக்கணக்கில் சம்பளம் தருவதாகவும் தயாரிப்பாளர்கள் நேரடியாக கவுண்டமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆனால் கவுண்டமணி எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த பாஷையும் தெரியாது எனவே தெரியாத மொழியில் நடிக்க விரும்பவில்லை என நேரடியாக கூறியுள்ளார். அதோடு எவ்வளவு கோடி கொடுத்தாலும் இதுதான் என்னுடைய பதில் என்றும் கூறி தயாரிப்பாளர்களை திருப்பி அனுப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.