நடிகர் கார்த்தி வித்தியாசமான திரைப்படங்களை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது கூட இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கார்த்தியின் சூப்பர் ஹிட் படம் ஒன்று ஜப்பானில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறதாம்.
தமிழ் சினிமா நடிகரின் ஒரு படம் ஜப்பானில் வெளியாகுவது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதை தற்போது செய்து காட்ட உள்ளது கார்த்தியின் படம் ஒன்று. இதற்கு முன்பு ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சில படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த படம் வெளியாக இருக்கிறது.
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கைதி. இந்த படத்தில் ஒரு பாடல் கூட கிடையாது. மேலும் இந்த படத்தில் ஆக்சன் சீன் மட்டும் தான் அவருடன் கைகோர்த்து அர்ஜுன் தாஸ், நரேன் போன்ற டாப் நடிகர்கள் நடித்து இருந்தனர்.
இந்த படத்தில் கார்த்தியும் ஒரு ஆயுள் தண்டனைக் கைதியாக நடித்திருப்பார். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாக செல்லும் அந்த அளவிற்கு இந்த திரைப்படம் மிக அருமையாக இருந்ததால் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்காத அளவிற்கு விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது ஜப்பான் மொழில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெறும் என கருதப்படுகிறது. ஜப்பானில் இந்த திரைப்படத்திற்கு “கைதி டில்லி” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
