ஹீரோயினாக நடிக்க தயாரான கார்த்தியின் மகள்.! நெடுநெடுவென வளர்ந்து விட்டாரே.. வைரல் புகைப்படம்

கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் சிறுத்தை. இந்த படத்தில் இவருக்கு மகளாக பேபி ரக்ஷனா நடித்திருந்த நிலையில் இவருடைய கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது எனவே இவரை விரைவில் மறந்து விட முடியாது.

படத்தில் இவருடைய துருதுரு பேச்சு செயல் போன்றவை அழகாக காமிக்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்குப் பிறகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில்  படிப்பில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்பொழுது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு நன்கு வளர்ந்துள்ளார் ரக்ஷனா. இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்று இருக்கும் பேட்டியளித்திருந்தார்.

அப்பொழுது படத்தில் நடிக்கும் பொழுது நான் அடிக்கடி தூங்கி விடுவேன் எனவே நான் எழுந்திருக்கும் வரையில் பட குழுவினர்கள் அனைவரும் காத்திருப்பார்கள் கார்த்திக் சார் ரொம்ப ஸ்வீட் எனவும் குழந்தை நட்சத்திரமாக சிறுத்தை படத்தை தொடர்ந்து கடல், ஓகே கண்மணி, யாழ் போன்ற படங்களில் நடித்த பிறகு வேறு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருப்பதற்கான காரணத்தையும் கூறியிருந்தார்.

அதாவது வளர்ந்து ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு நாள் நடிக்காமல் இருந்தாராம் சீக்கிரம் நல்ல கதைக் கொண்ட படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஏராளமான நடிகைகள் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் பொழுதே கதாநாயகியாக நடித்துவரும் நிலையில் அதேபோல் ரக்ஷனாகவும் பள்ளி பருவத்திலேயே கதாநாயகியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

rakshana
rakshana

தற்பொழுது ரக்ஷனா 11ஆம் வகுப்பு முடித்துவிட்டு 12ஆம் வகுப்பு செல்கிறார். வளர்ந்து டீன் ஏஜில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இவருடைய முகம் கதாநாயகிக்கு செட் ஆனால் கண்டிப்பாக இயக்குனர்கள் தங்களது படங்களில் நடிக்க வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment