மீண்டும் பருத்தி வீரனாக களமிறங்கும் நடிகர் கார்த்திக்..! இணையத்தை மிரட்டும் டைட்டில் போஸ்டர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்திக் இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவருக்கு வந்தியாதேவன் என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சுல்தான் என்ற திரைப்படம் நல்ல  கதையம்சம் உடையதாக இருந்தாலும் படுதோல்வியை சந்தித்து விட்டது.

இந்நிலையில் எப்படியாவது ஒரு மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என்ற காரணத்தினால் அயராது போராடி வரும் நடிகர் கார்த்திக் தற்போது வெற்றிப்பட இயக்குனருடன் கைகோர்க்கிறார். இவ்வாறு அந்த இயக்குனர் யாரும் கிடையாது கொம்பன் திரைப்படத்தை இயக்கிய முத்தையா தான்.

இவ்வாறு இவர் சமீபத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை முடித்தபிறகு பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த கையோடு தனது அண்ணன் உடன் இணைந்து 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக முத்தையா இயக்கியிருக்கும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளவர்கள். இத்திரைப்படத்திற்கு விருமன் என்ற பெயர் வைத்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் ஒலிக்கும் இசைக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தை பார்த்தாள்  மாபெரும் ஹிட்டு கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

karthik-1

Leave a Comment

Exit mobile version