தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் கார்த்தி. இவர் முதலில் பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமாகி பிரபலமடைந்தவர். பின்பு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து மக்களிடையே அவருக்கான நிரந்தர இடத்தை பிடித்துள்ளார்.
தமிழில் கடைசியாக சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படம் திரையரங்கில் நல்ல வசூல் வேட்டை நடத்தியது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழில் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். பின்பு தற்போது ராஸ்மிகாவிற்கு தமிழில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணமே உள்ளன.
தற்போது கார்த்தி விருமன் திரைபடத்தில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் கார்த்தி. மேலும் இவர் சர்தார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் தற்போது இந்த ஆண்டு இவர் கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. நடிகர் கார்த்தி குடும்ப வாழ்க்கையில் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு உமையாள் என்னும் பெண் குழந்தை ஒன்று உள்ளது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
பின்பு சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு மகன் பிறந்துள்ளதாக அறிவித்திருந்தார் கார்த்தி. மேலும் மகனின் பெயர் கந்தன் என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அவரது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் கார்த்தி. இதோ அந்த புகைப்படம்.
