WWE ஜாம்பவான் ஜான் சீனாவை சந்தித்த “நடிகர் கார்த்தி” – அதிகாரப்பூர்வமாக வெளிவந்த புகைப்படம்

Actor karthi meet John cena : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன் பார்ட் 1, பார்ட் 2, சர்தார் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் கார்த்தி கைவசம் பார்டு 2 திரைப்படங்கள் நிறையாக இருக்கின்றன.

அந்த வகையில் சர்தார் 2, கைதி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது தவிர ஜப்பான், கார்த்தி 26 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதில் முதலாவதாக ஜப்பான் திரைப்படம் வெளியாக இருக்கிறது ஆம் அந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திரை உலகில் வெற்றி நடிகராக ஓடும்  கார்த்தி அவ்வபொழுது தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார் இதனால் நடிகர் கார்த்தியை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் இந்த நிலையில் நடிகர் கார்த்தி WWE ஜாம்பவான் ஜான் சீனாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அந்தப் புகைப்படத்தை தனது டுட்டர் பக்கத்தில் வெளியிட்டு சில பதிவுகளையும் போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது.. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜான் சீனா மிகவும் அன்பாகவும் பணிவாகவும் இருப்பதற்கு நன்றி, அந்த சில நிமிடங்கள் நீங்கள் எப்படி எல்லோரையும் ஸ்பெஷலாக உணர வைத்தது.

அற்புதம் என்னால் மறக்கவே முடியாது என அவர் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என கூறி  கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நடிகர்கார்த்தி ஜான் சீனாவுடன் எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.