கொலவெறியுடன் பார்க்கும் நடிகர் கார்த்தி – ஜப்பான் படத்திலிருந்து வெளிவந்த புதிய போஸ்டர்.

0
karthi-
karthi-

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் தன்னுடைய அண்ணன் சூர்யாவை போலவே தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த நான் மகான் அல்ல, பருத்திவீரன் என பல படங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்..

அதே சமயம் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்கின்றன. கடைசியாக கூட நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன், சர்தார் பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் அடுத்தடுத்து பெரிய வெற்றியை பதிவு செய்தன அதனைத் தொடர்ந்து கார்த்தி பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம், ஜப்பான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இரண்டு படங்களுமே கார்த்திக்கு முக்கியமான திரைப்படம் ஏனென்றால் பொன்னின் செல்வன் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனால் இரண்டாவது திரைப்படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது ஜப்பான் திரைப்படம் முக்கியமாக அமைய காரணம் அந்த படம் தான் நடிகர் கார்த்திக்கு 25 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் திரைப்படம் ஒரு வித்தியாசமான படமாக உருவாகி வருகிறது ராஜ்முருகன் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார் கார்த்திவுடன் கைகோர்த்து அணு இமானுவேல் ஹீரோயின்னாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மற்றபடி இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு வெளியே விடாமல் சஸ்பென்சாக வைத்திருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஜப்பான் படக்குழு பொங்கல் தினத்தை முன்னிட்டு கார்த்தியின் புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியிருக்கிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..