கருணாஸ் உடன் ஜோடி சேரும் பிக்பாஸ் நடிகை… இந்தச் சின்ன வயதில் இவருடனா…

0

காமெடி நடிகர்களாக அறிமுகமாகி தனது சிறந்த நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் கருணாஸ். இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றது இதன் காரணமாக சினிமாவில் விறுவிறுவென வளர்ந்தார் அந்தவகையில் இவர் பெரும்பாலும் இயக்குனர் பாலா திரைப்படத்தின் தான் நடித்துள்ளார்.

காமெடியில் தற்பொழுது வரையிலும் மறக்கமுடியாத நடிகர்களான  வடிவேலு, கவுண்டமணி, செந்தில் ஆகியோர்களைப் போலவே கருணாசும் அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் இவரின் எதார்த்த காமெடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இவரும் மற்ற சில காமெடி நடிகர்கள் போலவே காமெடியில் கலக்கி வந்த இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் திண்டுக்கல் சாரதி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.இத்திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்தவகையில் முதலுக்கு மோசம் இல்லை என்று கூறும் வகையில் வசூல் செய்தது இத்திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு பிறகு கருணாஸ் தானாகவே சொந்தமாக திரைப்படங்களை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்து கலக்கி வந்தார். ஆனால் இவர் ஹீரோவாக நடித்திருந்த திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றியைப் பெறாத காரணத்தினால் மீண்டும் காமெடி மற்றும் குணச்சித்திரம் போன்ற கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

rithika
rithika

இப்படிப்பட்ட நிலையில் நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ரித்திகா ஒப்பந்தமாகியுள்ளார்.  அந்த வகையில் இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில்தான் நடைபெற்றது. அதோட மிகவும் விறுவிறுப்பாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.