பிரபல நடிகையை லிப்லாக் சீனில் வச்சு செய்த கருணாஸ்.. புகைப்படத்தைப் பார்த்து பொங்கும் ரசிகர்கள்..

0

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து அதன் பிறகு ஹீரோவாக நடிப்பதற்கு ஆசைப்பட்டு ஆனால் ஹீரோவாக ஜெயிக்க முடியாத காரணத்தினால் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த வந்தவர்கள் பலர் உள்ளார்கள்.

அந்த வகையில் ஒருவர்தான் நடிகர் கருணாஸ் இவர் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.வடிவேலு, செந்தில்,கவுண்டமணி அவர்களுக்கு அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் என்றால் அது கருணாஸ் தான்.

இவ்வாறு காமெடி நடிகராக பிரபலமடைந்த இவர் அரசியலிலும் கவனம் செலுத்தி வந்தார். அதன் பிறகு சில திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். சொல்லப்போனால் கருணாஸ் சினிமாவிற்கு கானா பாடகராக அறிமுகமாகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு  இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான நந்தா என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு  தொடர்ந்து பல படங்களில் கருணாஸ் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் திண்டுக்கல் சாரதி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் முதலுக்கு மோசமில்லை என்ற வகையில் அமைந்தது .அதன் பிறகு தானே சொந்தமாக தயாரித்து அதில் ஹீரோவாக நடித்து வந்தார்.இவ்வாறு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவருக்கு பெரிதாக பிரபலமடையாத காரணத்தினால் மீண்டும் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் ஹீரோவாக ரகளபுரம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது நடிகையுடன் லிப் லாக் காட்சி ஒன்றில் நடித்திருப்பார். அந்த நடிகை வேறு யாரும் இல்லையாம் ரேணிகுண்டா திரைபடத்தில் நடித்திருந்த சஞ்சனா சிங் தான். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

karunaas
karunaas