ஒவ்வொரு காட்சியும் சும்மா மிரட்டலா இருக்கே.. வைரலாகும் கமலின் வீடியோ.!

மாநகரம் என்ற மாபெரும் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்ட இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதே போல் இவர் கார்த்தியை வைத்து இயக்கிய கைதி திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடித்துக் கொடுத்து விட்டது என்றே கூறலாம்.

மேலும் இவர் தற்பொழுது நடிகர் விஜய் அவர்களை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் விக்ரம்.

நடிகர் கமல்ஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில்,சூர்யா என பல பிரபலங்கள் நடித்துள்ளதால் படம் நன்றாக ஓடி உலக அளவில் பல கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்தத் திரைப்படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதிலும் இதில் வரும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கமல் ஆக்சன் காட்சிகளில் நடிக்கும் பொழுது ரசிகர்கள் இவர் நடிக்கும் காட்சிகளை கண்டு மகிழ்ந்தார்கள். அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் சீனில் நடிகர் கமல் ஒவ்வொரு துப்பாக்கிகளை எடுத்து சுடுவது போல் இருக்கும்.

அப்படி இந்த சீனை எடுக்கும் பொழுது எடுத்த மேக்கிங் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கமல் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார். என்று கமெண்ட் பதிவு செய்தும் வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பை பார்த்தீர்களா என்றும் கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment