நடிகர் மனோபாலாவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன்.! என்ன பதிவு செய்துள்ளார் பார்த்தீர்களா..

0
kamal
kamal

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்த நடிகர் தான் மனோபாலா இவர் இன்று உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் இவரது இழப்பை தாங்க முடியாமல் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களிலும் நேரில் வந்தும் செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்த நடிகர் ரஜினிகாந்தில் இருந்து பல பிரபலங்களும் இவருக்கு இரங்கலை தெரிவித்ததை நாம் பார்த்திருப்போம்.தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வந்த நடிகர் மனோபாலா தனது திறமையின் மூலம் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதேபோல பல படங்களையும் தயாரித்துள்ளார்.மேலும் பல முக்கிய திரைப்படங்களில் காமெடி நடிகனாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்தார்.

ஆனால் இவரது இழப்பு மக்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள்,திரைபிரபலங்கள் போன்ற பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது அந்த வகையில் பார்த்தால் இவருடன் பணியாற்றியவர்கள்,பழகியவர்கள்,நண்பர்கள்,உறவினர்கள் போன்றவர்கள் எல்லாருமே தற்பொழுது ஆழ்ந்த வருத்தத்தில் தான் இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மனோபாலா இன்று உயிரிழந்த விஷயத்தை ரசிகர்களால் மறக்கவே முடியாது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகர் மனோபாலா மேலும் தற்பொழுது இவரது இழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் இயக்குனர்,நடிகர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெறும் துயரத்தை அளிக்கிறது சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ள தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.