கொரோனா குறித்து அதிரடி வீடியோவை வெளியிட்ட கமலஹாசன் குவியும் வாழ்த்துக்கள்.!

உலக மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசி வரும் விஷயம் குரோன வைரஸ் இந்த வைரஸ் பல நாடுகளைத் தாண்டி இந்தியாவிலும் பரவி வருகிறது, உலக நாடுகளில் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கு பல விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு மக்களை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

மேலும் தமிழ்நாட்டிலும் தமிழக அரசு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் மக்களிடையே, அதுமட்டுமில்லாமல் கல்லூரி, பள்ளிக்கூடம், மால்கள் திரையரங்கம் என மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது, கொரோனா  குறித்து பல பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள், இந்த வைரஸ் 100 வருடத்திற்கு ஒருமுறை வரும் என சில தகவல் கசிந்துள்ளது.

இந்தநிலையில் நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இதில் கொரோனா நோய் பரவ நாம் காரணமாக கூடாது என கூறி அதனை தடுத்து நிறுத்துவோம் என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment