நடிகர் கமலை “விக்ரம்” படத்தில் இப்படி ஒரு வித்தியாசமான கெட்டப்பில் காட்ட போராடும் – லோகேஷ்.! மிரள போகும் ரசிகர் கூட்டம்

0

நடிப்பிற்கு பேர்போன உலகநாயகன் கமலஹாசன் சில வருடங்களாக அரசியலில் கால் தடம் பதித்து ஓடிக் கொண்டிருந்ததால் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் இருபின்னும் சினிமா அவரை விட வில்லை. தற்போது  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த கூட்டணி முதல் முறை இனைந்து உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த படத்தில் கமலின் கதாபாத்திரத்திற்கு ஈடு இணையாக வில்லன்கள் கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பதற்காக டாப் நடிகர்கள் ஒவ்வொருவராக தேர்ந்தெடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ் அந்தவகையில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்த நிலையில் மேலும் பல முக்கிய பிரபலங்களை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே லோகேஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் தற்போது இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஷூட்டிங்கில் தற்போது விஜய்சேதுபதி பகத் பாசில் கமல் ஆகியோர் சேர்ந்து பணியாற்றுகின்றனர்.

சமிபத்தில் பகத் பாசில், கமல் ஆகியோர் இருவரும் இணைந்து செல்பி மற்றும் பகத் பாசில் நடிப்பில் கடைசியாக வெளியான மாலிக் படத்தை, படக்குழுவினருடன் சேர்ந்து படத்தின் ஷூட்டிங்கில் உட்கார்ந்து படத்தைப் பார்த்து கொண்டாடியது அதன் புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமலின் தோற்றம் குறித்து சூப்பரான தகவல் ஒன்று கசிந்துள்ளது. இப்படத்தில் கமல் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடித்துள்ளார் மேலும் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக கமலை கிளின்டன் ஷவ்வுடன் மிகவும் இளமையாக காண்பிக்க உள்ளார்களாம்.

இதற்காக படக்குழுவினர் deaging technology தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.