உன் கதை ஒரு ஓரமா இருக்கட்டும் என கூறிவிட்டு, பழசை எடுத்து தூசிதட்டும் கமல்.!

kamal-hassan
kamal-hassan

கமலஹாசன் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் KH233 படத்தில் இணை இருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்த கமலஹாசன் அவர்கள் இந்த வெற்றியினை அடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பதிலும் மிகவும் பிசியாக இருந்தார்.

அந்த வகையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமான பிரச்சனைகளுக்கு நடுவில் துவங்கப்பட்ட இந்த படப்பிடிப்பை கமலஹாசன் அவர்கள் நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்தியன் 2 படத்தினை தொடர்ந்து கமல் அடுத்ததாக எச் வினோத் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அண்மையில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.

அப்படி கையில் தீப்பந்தத்துடன் மிரட்டலான போஸ்டரை வெளியிட்டு இருந்தார்கள். நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து மூன்று வெற்றி திரைப்படங்களை தந்த எச் வினோத் இதனை அடுத்து முதன்முறையாக கமலுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இவ்வாறு கமலின் 233வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் தூங்காமல் இருக்கும் நிலையில் அதற்குள் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூபாய் 125 கோடிக்கு நெட்ப்பிளிக் நிறுவனம் வங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விவசாயிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட இருந்த இந்த படத்தினை எச் வினோத் மறுத்து உள்ளாராம். இந்நிலையில் கமல் நடிப்பில் ஏற்கனவே உருவாகி ட்ராப்பான ‘தலைவன் இருக்கிறான்’ படம் தன் KH233 படக்கதை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்த நிலையில் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது.

தற்பொழுது தலைவன் இருக்கிறான் பட கதையை எச் வினோத் மீண்டும் உருவாக்க இருக்கிறார். இந்த படத்தினை முடித்துவிட்டு மணிரத்தினம் இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் KH234 படத்தினை உருவாக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.