பிரபல நடிகையை ரகசியமாக சந்தித்த கமலஹாசன்.! புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது பொதுவாக கமலஹாசன் அவர்கள் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து இருந்தாலும் கூட பெரும்பாலும் இவருடைய நடிப்பில் முத்தக் காட்சிகள் இருக்கும் என்ற அடையாளம் இருந்து வருகிறது மேலும் காதல் மன்னன் எனவும் பலரால் அழைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகத்தான் இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் நடிகைகளுடன் ஏதாவது ஒரு நெருக்கமான காட்சியோ அல்லது முத்தக்காட்சி அமைந்து விடும். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற திரைப்படங்களில் இவருடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்த நடிகை தான் பூஜா குமார்.

இந்தப் படத்தில் நடிகை பூஜா குமாருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதன் மூலம் கமலஹாசன் அவர்கள் பூஜா குமார் நெருக்கமாக பழக ஆரம்பித்த நிலையில் ஏராளமான புது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டு வந்தனர் இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

எனவே இவர்கள் ரகசிய உறவில் இருப்பதாக ஏராளமான வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில் பூஜா குமார் தன்னுடைய நெருங்கிய நண்பர் அவர் மீது நல்ல மரியாதை இருக்கிறது எனக் கூறினார் இப்படிப்பட்ட நிலையில் சில வருடங்களிலேயே திடீரென பூஜாக்குமார் திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி சில புகைப்படங்கள் வெளியானது.

kamal hassan
kamal hassan

மேலும் தற்பொழுது ஒரு மகனும் இவருக்கு இருக்கும் நிலையில் கமலஹாசன் மற்றும் பூஜா குமார் இருவரும் ரகசியமாக சந்தித்துக் கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. எனவே இந்த புகைப்படத்தினை பார்த்த பலரும் பல ஷூட்டிங் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment