தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவரும் நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்தடுத்து வித்தியாசமான காரியம் சம்பந்தம் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக காபி வித் காதல் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் இந்த திரைப்படத்தை சுந்தர் சி இயக்க ஜீவாவுடன் இணைந்து ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் வரலாறு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படம் ஒன்றில் லேடி கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் மேலும் அது குறித்த புகைப்படமும் வெளியாகி உள்ள நிலையில் அது சோசியல் மீடியாவில் வைரலா கி வருகிறது. அதாவது சூப்பர் குட் பிலிம்ஸ் சவுத்ரி தயாரிப்பில் நடிகர் ஜீவா நடிக்க இருக்கும் இந்த படத்தினை இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்க இருக்கிறார்.
அந்த திரைப்படம் தான் வரலாறு முக்கியம் ரொமான்ஸ் காமெடி என உருவாகியுள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவாவை தொடர்ந்து காஷ்மிரா, பிரக்யா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இவர்களைத் தொடர்ந்து VTV கணேஷ், K.S. ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், சாரா சரண்யா, டி எஸ் கே, சித்திக் மற்றும் உள்ளிட்ட ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் படக்குழுவினர்களுடன் பத்திரிக்கையாளரை சந்தித்த பொழுது நடிகர் ஜீவா எஸ்எம்எஸ் படத்திற்கு பிறகு அது போன்ற ஒரு படம் வேண்டுமென அனைவரும் என்னை கேட்டார்கள் அப்படி ஒரு படமாக தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மிகவும் அதிகமான காமெடி உணர்வுகளை உடையவர் எனவே அது படத்திலும் பிரதிபலித்துள்ளது.

கோவிட் காலகட்டத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம் மக்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டும் என இந்த படத்தை உருவாக்கியுள்ளோம் ஹீரோயின் பரக்யா மற்றும் காஷ்மிரா இருவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது மேலும் காஷ்மீரா இதில் மலையாளம் கலந்த தமிழ் பேசி அசத்தியுள்ளார் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை பகிர்ந்தார் ஜீவா. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் ஜிவா பெண் கெட்டப்பில் நடித்திருக்கக்கூடிய காட்சிகளின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலா கி வருகிறது.